2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இலட்சக்கணக்கானோரை கவர்ந்த வாத்துகளின் ' அணிவகுப்பு' வீடியோ

Kogilavani   / 2011 ஜூன் 21 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாத்துகள் பல இணைந்து இராணுவ வீரர்களைப் போல் அணிவகுப்பில் பங்குபற்றிய வீடியோ காட்சி  இணையத்தளத்தில் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பெல்ஜியம் நகரில் 13 வாத்துக்கள் அணிவகுப்பில்  பங்குபற்றியிருக்கும் காட்சியானது யூ ரியூப் இணையத்தளத்தில்  வெளியாகியுள்ளது. இந்த வாத்துக்களை இரு சிப்பாய்கள் வழிநடத்திச் செல்லும்  காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

18 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியை இதுவரை 300,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

'நான் பெல்ஜியம் நகரில் வாழ்கின்றேன் என்பதை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன்' என்று இந்த வீடியோவை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி வீடியோவை கீழே பார்வையிடலாம்:


  Comments - 0

  • Jeewan Wednesday, 22 June 2011 05:49 AM

    நன்றாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .