2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இரட்டைத் தட்டு பஸ்ஸில் நிர்வாண பெண் பயணி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரட்டைத் தட்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமொன்று ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் விலாடிவோஷ்டொக் நகரத்தை சேர்ந்த 60 வயது பெண்ணொருவரே இவ்வாறு நிர்வாணமாக பயணம் செய்துள்ளார். இவர் திடீரென தனது ஆடையை கழற்றி எறிந்து சக பயணிகளை விழிபிதுங்கச் செய்தார். அவரை ஆடைகளை அணியச் செய்வதற்கு சக பயணிகள் முயற்சித்த போது அதற்கு அப்பெண் இணங்க மறுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணித்தியாலத்தின் பின்  பொலிஸாரும் மருத்துவ உதவியாளர்களும் இணைந்து, குறித்த பெண்ணை உடல் நிலை பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு செல்ல சம்மதிக்கச் செய்தனர்.

'அவர் ட்றக் சூட் அணிந்திருந்தார். அடுத்த நிமிடம் நிர்வாணக் கோலத்துடன் பஸ்ஸில் ஆடத் தொடங்கினார்' என ஒரு பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0

  • xlntgson Wednesday, 19 October 2011 08:57 PM

    விமான தாதி சேவை பன்முகப்படுத்துதல் செவிக்குணவு இல்லாத போது சிறிது (வயிறுக்கும்) கண்ணுக்கும் ஈயப்படும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--