2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பாவாடை அணிந்து பாடசாலையில் ஆர்பாட்டம் செய்த மாணவனுக்கு மனித உரிமை ஆர்வலர்களுக்கான விருது

Kogilavani   / 2011 நவம்பர் 23 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்கு மாணவிகளை போன்று ஆண் மாணவர்களும் பாவாடையை சீருடையாக அணிந்து வருவதற்கான அனுமதியை கோரி போராட்டம் நடத்திய மாணவன் மதிப்பு மிக்க மனித உரிமைகளுக்கான விருதை வென்றெடுத்துள்ளார்.

லண்டனில் கேம்பிரிஜிற்கு அண்மையில் உள்ள ஹிமிங்கடன் விலேஜ் கல்லூரியில் கல்விக் கற்று வரும் கிரிஸ் (வயது 13) என்ற மாணவனே மதிப்பு மிக்க மனித உரிமை ஆர்வலர்களுக்கான விருதை வென்றெடுத்துள்ளார்.

மேற்படி மாணவன் கடந்த மே மாதம் பாடசாலைக்கு தனது சகோதரியின் கறுப்பு நிற பாவாடையை சீருடையாக அணிந்துசென்று, ஆண்மாணவர்கள் நீண்ட காற்சட்டையை சீருடையாக அணிந்து வரவேண்டுமென்ற பாடசாலையில் ஒழுங்குவிதிகளுக்கு எதிராக போரட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'சூடான காலநிலையின் போது பெண் மாணவிகள் குட்டைப் பாவாடையை அணிந்துவருவதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் ஆண்மாணவர்கள் நீண்ட காற்சட்டை அணிந்து வரக் கோரி பாரப்பட்சம் காட்டுகின்றது.

இவ்வாறான காலநிலையில் மாணவர்கள் நீண்ட காற்சட்டையை அணிந்துவரும்போது மயக்கமடைகின்றனர்.

நீண்ட காற்சட்டைகளை அணிந்துக் கொண்டு இருக்கும் போது ஏற்படும் உஷ்ணமானது எமது கவணத்தில் தாக்கம் செலுத்துவதுடன் படிப்பிலும் கவனத்தை சிதறடிக்கின்றதென' அம்மாணவன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாணவனின் கருத்துக்கு அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளரான அட்ரெய்ன் சைல்ஸ்  என்பவர் தொலைக்காட்சியில் குட்டைப் பாவடை அணிந்த   நிலையில் தோன்றி மேற்படி மாணவனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்படி மாணவன் லண்டனின் தென்கரை மையத்தில் நடைபெற்ற மதிப்பு மிக்க மனிதருக்கான போட்டியில் பரிசில்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

பாடசாலை மாணவர் செயற்குழுவில் அங்கத்துவராக இருக்கும் கிறிஸ் இந்த விருது குறித்து தெரிவிக்கையில், " இதற்கு இத்தனைய வரவேற்பு இருக்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது" எனத்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • avathaani Thursday, 24 November 2011 01:44 PM

  மாணவி ஒருவர் மாணவர்களின் சீருடை அணிந்து வருவர வலியுறுத்தி மாணவர்களின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் செய்தால், மதிப்பு மிக்க பெண்ணுக்குரிய விருதை மாணவி பெறுவாரோ?

  Reply : 0       0

  tamilan Friday, 25 November 2011 12:48 AM

  இங்கிலாந்து ஏன் கம்ரூனுக்கு இந்தப் பட்டத்தை வழங்கவில்லை .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X