2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஒபாமா, மிட் றொம்னியின் பெயர்களை தனது இரட்டை குழந்தைகளுக்கு சூட்டிய பெண்

Kogilavani   / 2012 நவம்பர் 11 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலன்று இரட்டை குழந்தைகளை பிரசவித்ததால் அக் குழந்தைகள் இரண்டிற்கும் ஒபாமா மற்றும் மிட் றொம்னி என்ற பெயர்களை சூட்டியுள்ளார்.

கென்யாவைச் சேர்ந்த மில்லிசெண்ட் ஒவுவர் எனற 20 வயதுடைய பெண்ணொருவருக்கே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலன்று இரட்டை குழந்தைகள் கிடைத்துள்ளன.

'2012 ஆம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மறக்க முடியாது. ஜனாதிபதியும் குடியரசின் சவாலுக்குரியவர்களின் பெயர்களை எனது பிள்ளைக்கு சூட்டுவதில் பெருமையடைகிறேன்' என அப் பெண் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணுக்கு கென்யாவின் கொகெலோ கிராமத்திற்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்துள்ளன. மேற்படி கிராமத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தூரத்து உறவினர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிராமம் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலின் போதும் தேர்தல் காய்ச்சலில் உறைந்து போயிருந்தததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன்.

தேர்தலில் ஜனாதிபதி பராக் ஒபமாக வெற்றிபெற்றதை காண்பதற்காக கொகெலோ மக்கள் திரைகாட்சிக்குமுன் கூடியிருந்ததாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .