2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிமுனையில் இளைஞருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சகோதரிகளுக்கு சிறை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கி முனையில் இளைஞர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடபட்ட சகோதரிகள் இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தின் பீர் மிங்காம் நகரில் இடம்பெற்றுள்ளது.
 
இங்கிலாந்தில் உள்ள பீர் மிங்காம் நகரைச் சேர்ந்தவர் ஒயிட்னி நோட்டிஸ் (வயது 20). இவரது தங்கை யஸ்மின் (வயது 19). இவர்கள் இருவரும் உடல்நலக்குறைவான 22 வயது இளைஞர் ஒருவரை  தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது கைகளை கட்டி தங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து போலி துப்பாக்கியொன்றைக் காண்பித்து தங்களது விருப்பத்துக்கு மாறாகச் செயற்பட்டால் சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த இளைஞருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் இவர்களிருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த உறவினை தங்களது கையடக்கத் தொலைபேசியின் மூலம் வீடியோ பதிவு செய்துள்ள இவர்கள், அந்த வீடியோக் காட்சியை நண்பர்களுக்கும் அனுப்பி சந்தோஷப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மேற்படி இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து அவ்விரு சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து வழக்கியை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், யஸ்மினுக்கு 7 வருடங்களும், ஒயிட்னி நோட்டிசுக்கு 5 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளது. 

  Comments - 0

 • hamm Saturday, 17 November 2012 12:03 PM

  5:98. "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்," --- அல் குர்ஆன்.

  8:25. "நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்." --- அல் குர்ஆன்.

  38:14. "இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று. "---அல் குர்ஆன்.

  58:5. "எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்(அல்லாஹ்வை மறுப்பவர்)களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு." --- அல் குர்ஆன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .