2021 ஜனவரி 27, புதன்கிழமை

பெரிதாக்குவதற்காக ஒயிலை பூசி ஆணுறுப்பை இழந்த நபர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமுடியை கூம்பகமாக மாற்றுவதற்காக பல்வேறு களிம்புகளை (ஜெல்) பூசிக்கொண்டு தலைமுடியை சீவுவதற்கு சீப்பையே பயன்படுத்தாத இளைஞர்கள் இருக்கையில் நடுத்தரவயது நபரொருவர், தனது ஆணுறுப்பை பெரிதாக்க முயன்று அதனை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்திலேயே இந்த சம்பவம்; இடம்பெற்றுள்ளது. ஒருவகையான ஒயிலை தனது ஆணுறுப்பில் பூசியதனாலேயே அவர் அந்த உறுப்பை இழக்கண் வண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியர்கள் மேற்படி நபரின்; ஆணுறுப்பை மிகுந்த சிரமத்தின் மத்தியில் அகற்றியுள்ளனர்.

தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டுமென்று எண்ணிய இந்நபர், அதற்கு மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படாத முறையில் ஒலிவ் ஒயில் எண்ணெயை உறுப்பினுள் உட்செலுத்தியுள்ளார்.

இதனால் அவர் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு ஆணுறுப்பை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த முறையை பின்பற்றினால் ஆணுறுப்பு பெரிதாகிவிடுமென தனது நண்பர்களுக்கு அவர் தெரிவித்துள்ளமை இதில் விசேட அம்சமாகும்.

இந்நபர் பல ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வந்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது அவரை புற்றுநோய்க்கு இட்டுச் சென்றதுடன் சத்திர சிகிச்சையினூடாக அவரது ஆணுறுப்பை அகற்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

தாய்லாந்தில் ஒலிவ் ஒயில் எண்ணெய் முறையை பயன்படுத்தி பலரும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபவதை வழமையாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டினால் 40 பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி நபர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த நாம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். இது மிகப்பெரிய அறுவை சிகிச்சையாகும் என பேங்கொக்கில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்களின் இத்தகைய செயற்பாட்டுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செயற்பாடானது நகர்புறங்களுக்கு அப்பால் உள்ள மருத்துமனைகளில் செய்யப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .