2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

கட்டிப்பிடித்து ஆசி வழங்கும் பிரமிட்டு சாமியார் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலத்தில் சாமியார் ஒருவர் தமது தியான மண்டபத்திற்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிம்மரிஷி சுபாஷ் பத்திரி என்ற சாமியாரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர் மகேஷ்வரா மகா பிரிமிட்டு என்ற பெயரில் தியான மண்டபமொன்றை நடத்தி வருகிறார். சுமார் 136  ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆசிரமத்தின் மையப்பகுதியில் பிரமிட்டு போல் பிரமாண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 40 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தியானம் செய்யலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பெரிய அளவில் தியானம் பயிற்சி நடந்தது. இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த தியான பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பெண்களை மேறப்டி சாமியார் கட்டிப்பிடித்து ஆசி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பல பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதை தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று கமராவில்; பதிவு செய்து ஒளிபரப்பியது.

சாமியாரின் செயற்பாடு ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெண்கள் அமைப்பினர் ஆசிரமம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சாமியாரை செவ்வி காணச் சென்ற 2 தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் ஆசிரிம ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்படு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து சுபாஷ் பத்ரி தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (மாலைமலர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .