2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வீட்டுப்பாடம் செய்யாத மகனை காயப்படுத்திய தாய்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாலர் பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட வீட்டுப்பாடங்களை  செய்யாததன் காரணத்தினால் தாய் ஒருவர் தனது ஆறு வயது மகனை உடை கொழுவும் கொக்கியில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் மேற்கு பகுதி, கோங்டன் மாகாணம், ஜியான்ங் மென் எனும் நகரில் உள்ள பாலர் பாடசாலையில் படிக்கும் ஃஸியோ பிங் எனும் சிறுவனே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

மேற்படி சிறுவன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பாலர் பாடசலையில் கற்பித்துகொடுக்கும் ஆசிரியர் ஒருவரின் மூலமாக பொலிஸாருக்கு தகவல் சென்றடைந்துள்ளது. 

இச்சிறுவன் எவ்வாறு காயப்பட்டுள்ளான் என்பதனை புகைப்படமாக எடுத்து குறித்த ஆசிரியை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த சிறுவன் பாடசாலையில் கொடுக்கும் வீட்டு பாடங்களை செய்வதில்லை என்றும்; பாடசாலையில் அடங்காபிடாரி என்று பெயர் வாங்கியதனாலுமே மகனை இவ்வாறு அடித்ததாக சிறுவனின் தாய் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

'நான்; அன்றைய தினம்; வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதினாலேயே எனது தாய் என்னை அடித்தார்' என குறித்த சிறுவன் கூறியுள்ளார்.
நியாயமான காரணத்தினால் குறித்த சிறுவனுக்கு அடிவிழுந்துள்ளதாக கூறி சீன பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் சிறுவனின் உடலில் மிக மோசமாக காயங்கள் காணப்படுவதால் இனி இவ்வாவு முறைதவறி நடப்பதை தவிர்த்துகொள்ளுமாறு சிறுவனின் தாயை எச்சரித்துள்ளதாக சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறுவனுக்க முறையான தீர்வு கிடைக்காததன் காரணத்தினால் குறித்த ஆசிரியை சிறுவனது காயங்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--