2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பாலியல் உறவின் பின் காதலியை தாக்கியவருக்கு 9 வருட சிறை

Kogilavani   / 2013 ஜூலை 31 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் உறவின் பின்னர் தனது காதலியை தாக்கிய நபருக்கு 9 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஜோல் நாஸர் என்ற 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர் பணியில் ஈடுபட்டு வந்த இந்நபர் தனது காதலியான அனெய்லா சாவிஸ்டோகா என்ற 38 வயதுடைய பெண்ணை இவ்வாறு தாக்கியுள்ளார்.

மேற்படி இருவரும் அறைசொகுசு அறையொன்றில் பாலியல் உறவில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த நபர் திடீரென அப்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இந் நபரின் தாக்குதலால் அச்சமடைந்த அப் பெண் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக அரை நிர்வாண கோலத்தில் தனது தொடர்மாடிக் குடியிறுப்பின் மூன்றாம் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார்.

இப்பெண் பாய்ந்தபோது கீழே குதித்த போது கம்பியொன்று துரதிஷ்டவசமாக அவரது உடலின் இடை மற்றும் பிட்டம் பகுதியை துளைத்துள்ளது.

இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த குறித்த பெண் ஆபத்தான நிலையில் லண்டன், சென்.மேரிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண்ணை மயக்கமடையச் செய்த பின்பே மருத்துவர்களின் அப்பெண்ணின் பிட்டம் மற்றும் இடைப் பகுதிகளில் துளையிட்டிருந்த கம்பியை அகற்றியுள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக குறித்த பெண்ணின் இடை மற்றும் பிட்டம் பகுதி பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, விலா எலும்பு, அடிவயிறு என்பவையும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆனால், இப் பெண் போதை பொருட்களை உட்கொண்ட நிலையில் ஜன்னலில் இருந்து தவறி வீழ்ந்ததாக நஸீர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நஸீருடன் மேற்கொள்ளப்பட்ட இரண்டுவார விசாரணைகளில் நஸீர் குற்றவாளி என்பது நிருபணம் ஆகியுள்ளது.

இவ்வாறான பேராபத்திலிருந்து அனெய்லா காப்பாற்றப்பட்டமை அபூர்வமானது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • vaarisu. Wednesday, 31 July 2013 03:43 PM

    அவருக்கு 63 வயதாம், அவ‌வுக்கு 38 வயதாம், இரண்டு பேருக்கும் இடையில் காதலாம்... இதை என்னவென்று சொல்லுறதப்பா...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--