Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 மே 24 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் வழங்கல், தூய்மையான முறையில் இடம்பெறவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
2011ஆம் ஆண்டில், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால், அக்கராயனில் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குடிநீர்த் தாங்கி மற்றும் நீர் சுத்திகரிப்புத் தொட்டிகள் என்பன, பாதுகாப்பான முறையில் அமைக்கப்படாததன் காரணமாக, பறவைகள், குரங்குகளின் எச்சம், நீருடன் கலந்து வருகின்றது.
இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகளுக்கு, பிரதேச மக்களால் தெரியப்படுத்தப்பட்டது.
இருப்பினும், இதுவரையில் பாதுகாப்பான குடிநீர்த் திட்டமாக இது மாற்றப்படவில்லை எனவும் அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் 750 குடும்பங்களில் 400 குடும்பங்கள், இக்குடிநீரினையே நம்பியுள்ளதால், அதனை பாதுகாப்பான குடிநீராக மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கியில் இருந்தே, மேற்படி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்கு, அக்கராயன் மத்தி ஆகிய பகுதிகளுக்கே, அந்நீர்த் தாங்கியின் கடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
38 minute ago
45 minute ago