2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகள் இன்றி வாழும் பழையமுறிகண்டி மக்கள்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட பழையமுறிகண்டி கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை காட்டு யானைகளின் தொல்லை, அடிப்படை வசதிகள் இன்மையால் தாங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பழைய முறிகண்டி கிராமத்துக்கான பிரதான வீதியாகக் காணப்டும் சுமர் 15 கிலோமீற்றர் நீளமான பழையமுறிகண்டி - கொக்காவில் வீதி இதுவரை காலமும் எந்தவித புனரமைப்புகளும் உட்படுத்தப்படாதநிலையில் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், போக்குவரத்து வசதிகள் இன்றியும் வீதியால் பயணிக்க முடியாத நிலையிலும் தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், வைத்திய தேவை அல்லது ஏனைய தேவைகளுக்கு மல்லாவி அல்லது ஏ-9 வீதியின் கொக்காவில் வரை செல்வதற்கு ஓட்டோ ஒன்றுக்கு 1,500 ரூபாய் கொடுக்கவேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டள்ளனர்.

இதேவேளை, குறித்த கிராமத்தில் தினமும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கிராமத்தில் தற்போது சுமார் 48 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், பல்வேறு தேவைப்பாடுகளை உடைய கிராமத்தின் தேவைகள் இதுவரை நிறைவு செய்யப்படாமையினால் இக்கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் வசதிகளைத் தேடி வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளதாகவும் விவசாயக் கிராமமான இக்கிராமத்தின் விவசாயத்தை நம்பிய வகையில் மேற்படி 48 குடும்பங்களும் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .