Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முள்ளியவளை - தண்ணீரூற்றுப் பகுதியில், நேற்று (19) இரவு, அரச உத்தியோகத்தர் நடத்திய தாக்குதலில், குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீரூற்று மேற்கு பகுதியைச் சேர்ந்த ப.பகீரதன் (வயது 47) என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று (20) நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக, நேற்று (19) தண்ணீரூற்று பிள்ளையார் கோவில் பகுதியில் அலங்கார வேலைகள் இடம்பெற்றன.
இதன்போது, குறித்த குடும்பஸ்தருக்கும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், குறித்த குடும்பஸ்தர் தாக்குதலுக்கு இலக்கானார்.
சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .