2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மயில்வாகனபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசியர்கள் பற்றாக்குறை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும் என கண்டாவளை கோட்டக்கல்வி அதிகாரி வீ.,ராஜகுலசிங்கம் வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மயில்வாகனபுரம் அ.த.க. பாடசாலையில்  தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் மூன்று ஆசிரியர்கள் மாத்திரமே கல்விகற்பித்து வருவதாகவும் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு இப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என கண்டாவளைக் கோட்டக்கல்வி அதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X