2021 மே 08, சனிக்கிழமை

ஆஸியின் நிதியுதவியில் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அவுஸ்திரேலியா அரசாங்கம், உலக தொழிலாளர் நிறுவனத்தின் ஊடாக 6.4 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கிளிநொச்சி, முழங்காவிலில் அமைத்த பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடமாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் ஆண்களும் பெண்களுமாக 500 வரையான அங்கத்துவர்கள் உள்ளனர். இவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதி தரங்களுக்கு அமையாத பழங்கள் மற்றும் கறிவேப்பிலை, முருங்கை இலை போன்றவற்றை உலர்த்திப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பொருட்டே இப்பதனிடும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X