2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

’இரண்டு மாதங்களில் புனரமைக்கப்படும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் ஊர்வனிகன்பற்றில் உள்ள இந்து மயானம், இன்னும் இரண்டு மாதங்களில் புனரமைத்துத் தரப்படுமென, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்   உறுதியளித்தார்.

குறித்த மயானத்துக்கு இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டப் பின்னரே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்,

மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை கடுமையான  முயற்சிகளை மேற்கொள்வதாகவும் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் அவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் காலங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில்,  பிரதேச சபையின் உறுப்பினர்களான அருட்செல்வி, த.ரமேஸ்,வீரவாகுதேவர், கிராம அலுவலர் காண்டீபன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X