2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

உங்களில் ஒருவனாக செயற்படுவேன்

Niroshini   / 2016 மார்ச் 10 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

உங்கள் கிராமத்தின் குறைகள் களையப்படும் வரை உங்களில் ஒருவனாக செயற்பட்டு, குரல் கொடுப்பேன் என வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மண்ணாகண்டல் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பை நோக்காகக்கொண்டு முன்னெடுத்துவரும் 'சாதிக்கும் சந்ததி' செயற்றிட்டத்தின் ஊடாக, மண்ணாகண்டலில் இருந்து பேராறு மற்றும் கற்சிலைமடுவில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் இனிவரும் காலங்களில் உள்வாங்கப்படுவர்” என்றார்.

மேலும், “விளையாட்டு உபகரணங்கள் உட்பட இக்கிராமத்தின் வளர்ச்சிக்காக தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து, எழுபத்தைந்தாயிரம் ரூபாயினை ஒதுக்கும் அதேவேளை, மின்சார இணைப்புகளை முழுமைப்படுத்துவது தொடர்பாகவும் முன்பள்ளி மற்றும் மாணவர் போக்குவரத்து தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவேன்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--