2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஒட்டுசுட்டான் வெடிபொருளுடன் தொடர்புடை 16 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 22.06.18 அன்று புலிக்கொடி, வெடிபொருட்களுடன் சென்ற ஓட்டோ ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் குறித்த விசாரணையை மேற்கொண்டு முற்கட்டமாக ஒன்பது பேரை கைதுசெய்து விசாரித்துவந்துள்ளார்கள்.

இந்நிலையில், கடந்த மாதம் மேலும் இருவர் கைதாகியும் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ள நிலையில் அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது கிளிநொச்சியைச் சேர்ந்த மேலும் ஏழு பேர் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்த குற்றவாளிகளுக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.

இவர்களை ஒரு இலட்சம் ரூபாய், மூன்று ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் இதுவரை மூவர் பிணைவைத்து விடுதலையாகியுள்ளதுடன் நால்வர் இதுவரை பிணைவைக்காத நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பதில் நீதிபதி ரி. பரஞ்சோதி முன்னிலையில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் குறித்து தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பி ரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதா பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கை அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .