Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, அம்பாள்புரம் பகுதியில் தற்போது நிலவும் வரட்சியினால் பாரிய குடிநீர் நெருக்கடி காணப்படுவதாகவும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்டதூரம் செல்லவேண்டியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் தற்போது நிலவுகின்ற கடும் வரட்சியின் காரணமாக, குடிநீருக்கு பாரிய நெருக்கடி காணப்படுகின்றது. குறிப்பாக வீடுகளிலுள்ள கிணறுகள் நீர் வற்றிக் காணப்படுவதுடன், இக்கிராமத்திலிருந்து மிக நீண்டதூரத்திற்குச் சென்று குடிநீர் பெறவேண்டியுள்ளது.
மாந்தை கிழக்குப்பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர்த்தாங்கிக்கான கிணற்றிலும் நீரின்றிய நிலையில் இந்தப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தமக்கான குடிநீரை விநியோகிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும், இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago