Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, சிறுவர்களை குளங்களில் சென்று நீராட வேண்டாமென, முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குளங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது, புதிய குழிகள் உருவாக்கப்பட்டு, அதில் தற்போது நீர் நிறைந்து இருப்பதன் காரணமாக, குளங்களை நோக்கிச் செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், சிறுவர்கள் பாடசாலை முடிந்தவுடன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் குளங்களில் சென்று நீராடி, உயிராபத்துகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக, குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால், பெரியவர்களின் துணையின்றி சிறுவர்கள் குளங்களுக்கோ நீர் நிலைகளுக்கோ செல்ல வேண்டாமெனவும், திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி சுகாதாரத் திணைக்களத்தால், வீடுகள் அமைப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டுள்ள குழிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றது.
அக்குழிகளில், சிறுவர்கள் விளையாடி உயிராபத்துகளை எதிர்கொள்வதற்கான நிலைமை இருப்பதன் காரணமாக, வீட்டின் உரிமையாளர்கள் குழிகளை மூடி, நீர் நிலைகளின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வை சிறுவர்களுக்கு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
22 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
52 minute ago