George / 2016 மே 17 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இந்துக் கல்லூரி கட்டடங்களுக்குள் நீர் உட்புகுந்தமையால் செவ்வாய்க்கிழமை (17) தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமை வரை பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் கி.விக்னராஜா தெரிவித்தார்.
'கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சியில் பெய்த கடும் மழையால், பாடசாலை கட்டடங்களுக்குள் சுமார் 1 ½ அடி உயரத்துக்கு வெள்ளநீர் புகுந்ததுடன் இந்த வெள்ளநீர் இன்னமும் வடியாத நிலையில் காணப்படுகின்றது.
இதனால், பாடசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனைக் கருத்திற் கொண்டு பாடசாலையை சில தினங்களுக்கு மூடி, அதற்குரிய பதில் பாடசாலையை வேறு நாட்களில் நடத்துவது தொடர்பில் வலயக் கல்விப் பணிமனையில் அனுமதி பெறப்பட்டுள்ளது' என அதிபர் மேலும் கூறினார்.
31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
59 minute ago