2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழா

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின்  கலாசார விழா 2015 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கரைச்சி பிரதேச செயலா் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள  இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொள்ளவுள்ளார்.

வருடந்தோறும் இடம்பெறும் இக் கலாசார நிகழ்வில், கலை நிகழ்வுகளன் இடம்பெறவுள்ளதுடன், கலை மற்றும் சமூக பணிகளில்  கரைச்சி பிரதே செயலக பிரிவில் சிறப்பாக செயற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கரை எழில் விருதும்  வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

அத்தோடு, இவ்வருட கலாசார விழாவில் கரை எழில் புகைப்பட கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X