சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 மே 25 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோகச் செய்கையில், அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோத மேலதிக விதைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இரமைணமடுக் குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்;கப்பட்ட நெற்செய்கையினை விட, 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குளத்தின் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்;புக்களுக்கான பயிர்ச்செய்கைக் காணிகள் பங்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த சட்டவிரோதச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
10 minute ago
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago