2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘ஜனநாயகத்துக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஜனநாகத்தை நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக, வவுனியா நகரசபை யின் தலைவரும் வவுனியா வடக்குக்கான தேர்தல் பரப்புரைக்கான பொறுப்பாளராக செயற்பட்ட அப்துல் றசூல் முஹமட்  லரிப் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலற்ற ஜனநாயக ஆட்சியொன்றின் தேவையுணர்ந்து தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர். தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கென்பது இனவாத ரீதியாகவோ மதவாத ரீதியாகவோ நோக்கப்படகூடாது.

“தமிழ் - முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாக்களித்தது சிங்கள - பௌத்த மதம் சார்ந்த ஒருவருக்கே. இதனை இன்று இனவாதம் பரப்ப நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

“இனவாத ரீதியாக வாக்களிப்பு இடம்பெற்றிருந்தால், தமிழர்களும் முஸ்லிம்களும் தமது சமூகம் சார்ந்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பளார்களுக்கு அதிகளவில் வாக்களித்து தமது இனவாத சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பர்.

“எனினும், அவர்கள் அவ்வாறான நிலையில் என்பதையே தற்போதைய தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, புதிய ஜனாதிபதி இனவாத சிந்தனையார்களது கருத்தியலை செவிகளில் வாங்காது இந்த நாட்டின் மக்கள் ஜனநாயக கடமையை சரிவரவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் இந்த தேர்தலை பயன்படுத்தியுள்ளனர் என்பதனை உணர்ந்து, அனைத்து மக்களையும் அரவணைத்து செயற்பட முன்வரவேண்டும்.

“இந்நிலையில், வவுனியா வடக்கு மக்கள் எமது பரப்புரைகளின் பிரகாரம் அதற்கு ஆதரவளித்து சஜித் பிரேமதாஸவுக்கு அமோகமாக வாக்களித்தமைக்கும் நன்றி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .