2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகள் மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு, நந்திக்கடலில் அநாதரவான நிலையில் போடப்பட்டிருந்த சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட வலைகளை கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சிலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரையில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, கடலில் மீன்பிடிப்பதற்காக அநாதரவான நிலையில் விரிக்கப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் கைப்பற்றப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் கீழ் அந்த வலைகள் அழிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X