Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம், நேற்று (16) பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது கலையகத்தில் மண்டபம் நிறைந்த ஆர்வலர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு தனிநாயகம் அடிகள் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் மலர் வணக்கம் செய்தலுடன் ஆரம்பமாகியது.
அத்துடன் யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கியின் முன்பாக அமைந்துள்ள அடிகளாரின் உருவச் சிலைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மலர்மாலை அணிவித்துடன், தொடர்ந்து அருட்தந்தையர்கள், தமிழ்ச் சங்கத்தினர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் மலர் வணக்கம் செலுத்தினர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago