2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் வீடும் கடையும் எரிந்து நாசம்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி  டிப்போசந்தி  ஜீவப்பரியாரியார்  வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  ஏற்பட்ட திடீர்   தீ  விபத்தில்  வீடொன்றும்  கடையொன்றும்  எரிந்து  முற்றாக  சேதமடைந்துள்ளன.

தீ பரவிய  வேளை,   வீட்டில்  யாரும் இல்லை எனவும்  வீட்டிலுள்ளோர்  உயிர்த்த  ஞாயிறு  வழிபாட்டுக்காக  கோவிலுக்கு  சென்றிருந்தனர்  எனவும்   தெரியவந்துள்ளது.

கடை  மற்றும்  வீடு என்பன  ஒன்றாக  இருந்ததனால்  இத் தீ விபத்தில் இரண்டும் முற்றாக  சேதமடைந்துள்ளதுடன்,  தமது  வீடு மற்றும்  கடையில்  தீப்பற்றுவதற்கான  எந்த  சந்தர்ப்பமும்  இல்லை  எனவும்  இது  யாரோ  திட்டமிட்டே  தீ  வைத்திருக்கின்றனர்   எனவும்  வீட்டு  உரிமையாளர்   தெரிவித்தார்.

குறித்த  சம்பவம்  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  கிளிநொச்சி  போலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .