Kogilavani / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு நந்திக்கடலை ஆழமாக்க வேண்டும் என ல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவிலேயே இயற்கையாக இறால் வளம் கொண்ட நந்திக்கடலை ஆழமாக்குவதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
நந்திக்கடலை ஆழமாக்குவதற்கான முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண உறுப்பினர்களும் முன்னெடுக்கவேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டச்செயலரை சந்தித்த முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழுவும் நந்திக்கடலை ஆழமாக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago