2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நெருக்கடி தொடர்பாக மனு மூலம் தெரிவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் உயிலங்குளத்தின் 50 இந்தியன் வீட்டுத் திட்டத்தின் தற்போது நிலவுகின்ற நெருக்கடி தொடர்பாக, இந்தியாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் உயிலங்குளம் வீட்டுத் திட்ட மக்கள் மனு மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் உயிலங்குளம் வீட்டுத் திட்டத்திற்கு வருகைதந்த அமைச்சர் மனோ கணேசனிடம் உயிலங்குளம் வீட்டுத் திட்ட மக்கள் பல்வேறு குறைபாடுகளைத் தெரிவித்தனர். குறிப்பாக இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட 50 வீடுகளில் பல வீடுகள் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன்காரணமாக மழை காலத்தில் மழை நீர் வீடுகளுக்குள் உட்புகுவதாகவும் இது ஒரு மாதிரிக் கிராமமாக உருவாக்கப்பட்ட போதிலும், குடிநீர் வசதிகளோ போக்குவரத்து வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை. இக்குடியிருப்பில் இருந்து நீண்ட தூரம் நடந்து சென்றே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் குடியிருப்பில் காணப்படுகின்ற வசதியீனங்கள் காரணமாக குடும்பங்கள் வெளியேறிக் கொண்டிருப்;பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ கணேசன் இந்திய வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த மனு கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X