2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'நிலமெஹெவர' ஜனாதிபதி மக்கள் சேவை

George   / 2017 மே 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“நிலமெஹெவர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும் சேவை, கிளிநொச்சி, கண்டாவளை  தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன, முதன்மை அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்

இந்நடமாடும் சேவையில் தேசியஅடையாளஅட்டை, பிறப்பு-விவாக உத்தேச வயது சான்றிதழ்கள், வாகனசாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ அறிக்கை பரீட்சை மற்றும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஏனைய சேவைகள், முதியோர் அடையாள அட்டை, சிறுநீரக நோய், புற்றுநோய், தொழுநோய், காசநோய் ஆகியவற்றுக்கான நோய்க் கொ டுப்பனவு விண்ணப்பம், தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், இலவச மூக்குக்கண்ணாடி வழங்கல்.தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன் தொடர்பான ஆலோசனை முதியோர் அடையாள அட்டை வங்கிக் கடன் சேவை பொதுவான வைத்திய சேவைகள் காணி ​ே சேவைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.

இந்தநிகழ்வில், சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அ ருமைநாயகம், கண்டாவளை பிரதேச செயலாலளர் த.முகுந்தன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டதோடு  கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த பெருமளவு மக்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X