Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் டெலோ உறுப்பினராக ஆ.சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உடையார்கட்டு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த டெலோவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ச.திருச்செல்வம், சுய விருப்பின் பேரில் பதவி விலகிய நிலையிலேயே, அந்த வெற்றிடத்துக்கு ஆ.சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நேற்று (09), சமாதான நீதவான் ச.திருச்செல்வம் முன்னிலையில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரனின் அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
குறித்த கட்சியால், தனக்கு இரண்டு வருட அங்கத்துவம் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டே, இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, சாந்தி தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago