2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புதிய நீதிமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடர்ந்து துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதிகளை அமைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு அதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பித்து  வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 400 மில்லியன் ரூபாய் செலவில் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, மாங்குளம் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான் பிரதேச எல்லைகளை உள்ளடக்கிய வகையில் நீதிமன்ற கட்டடத்தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X