2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

புதிய பொறுப்பதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காமினி திஸாநாயக்க, இன்றைய தினம் (08) முற்பகல் 10.01 மணியளவில், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர், வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்திகாரியாகக் கடமையாற்றிய அசோக பிரியந்த, கடந்த மாதம், குருநாகலுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, காமினி திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--