2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில், பாம்பு கடிக்கு இலக்கான  சிறுவனொருவன், உயிரிழந்துள்ளார்.

குறித்த கிராமத்தின் கிராம அலுவலகரின் 3 வயது மகனே, நேற்று (10) இரவு, பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சிறுவன், இரவு உறங்குவதற்காக தனது படுக்கை அறை்குச் சென்றுள்ளார். இதன்போது, சிறிது நேரத்துக்கு பின்னர், வீட்டுக்குள் இரந்து, கண்டங்கருவளை இனத்தைச் சேர்ந்த பாம்பொன்று வெளியேறியுள்ளது. எனினும்,  அந்தப் பாம்பை, சிறுவனின் தந்தை அடித்து கொன்றுவிட்டதாகவும் எழுந்து வந்த சிறுவன், மீண்டும் உறங்குவதற்காகச் சென்றுவிட்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையல், இன்று (11) காலை, சிறுவனை எழுப்பியபோது, சிறுவன் நினைவற்று இருந்ததாகவம் இதன்பின்னர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சிறுவனை எடுத்துச் சென்றபோது, அவர் பாம்பு தீண்டியதில், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்றும் வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .