2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

’பராமரிப்பின்றி காணிகள் காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், நீண்ட காலமாகக் காணிகள் பராமரிப்பின்றிக் காணப்படுமாயின் அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பல காணிகள் பராமரிப்பின்றிக் காணப்படுவதால், கலாசாரப் பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனை என்பன அதிகரித்துள்ளதடன், நுளம்பு, விசஜந்துகளின் பெருக்கம் என்பன அதிகமாகக் காணப்படுகின்றனவெனவும் கூறினார்.

எனவே, காணி உரிமையாளர்கள் உடனடியாகச் செயற்பட்டு, தங்களது காணிகளைத் துப்புரவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்த அவர், தவறும் பட்சத்தில், பொதுமக்கள் நன்மை கருதி, சபை நிதியில் காணிகள் துப்புரவு செய்யப்படுமெனவும் கூறினார்.

அதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தும் உட்பட காணியின் இன்றைய சந்தைப் பெறுமதியின் 2 சதவீதத்தை உரிமையாளர் அல்லது பராமரிப்பாளர்களிடம் இருந்து சட்டபூர்வமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .