2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் பலர் காயம்

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – செட்டிகுளம், நேரியகுளம் சந்தியில், இன்று காலை 8 மணியவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற வவுனியா சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பஸ், நேரியகுளம் சந்தியில் சென்றுகொண்டிருந்த போது, கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இ.போ.பஸ் தூக்கி வீசப்பட்டதுடன், அதில் பயணித்த பலர் காயமடைந்த நிலையில், செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .