2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து 44 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பேசாலை முருகன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 44 கிலோகிராம் கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் திங்கட்கிழமை(28) மாலை மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

எனினும் வீடு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு திங்கட்கிழமை(28) மாலை 4 மணியளவில் குறித்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 20 பொதிகளின் அடைக்கப்பட்ட 44 கிலோகிராம் கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டன.

குறித்த வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வியாபாரி என தெரிவித்த மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி, குறித்த நபரை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த கஞ்சாப்போதைப்பொருள் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது எனவும் கஞ்சாப்போதைப்பொருளை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X