2021 மே 18, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், நேற்று வியாழக்கிழமை (01) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக நோய் தொடர்பாகவும் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தின் போது போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவை நியமித்து கடமையில் ஈடுபடுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொது சுகாதார வைத்திய அதிகாரி, மதுவரி திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .