2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மைதானத்தை மீட்டுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார் - கருங்கண்டல் மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான மைதானத்தை விடுவிக்குமாறு கோரி, அப்பாடசாலை மாணவர்களால், இன்று (13) காலை 7.30 மணியளவில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். 

சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக குறித்த பாடசாலைக்கான விளையாட்டு மைதானமாக குறித்த மைதானம் திகழ்கின்றது. 

இந்த நிலையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதியுடன் குறித்த விளையாட்டு மைதான பகுதியில், விளையாட்டுக் கழகம் ஒன்றுக்கு இடம் வழங்கப்பட்டு, கட்டிடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்குச் சென்ற மடு வலயக் கல்விப் பணிப்பாளர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

இதன்போது, மாணவர்களும் பெற்றோர்களும், தனித்தனியாக தமது கோரிக்கை அடங்கிய மகஜர்களை, வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கையளித்தனர். 

குறித்த பிரச்சினை தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக, அவர் மாணவர்களுக்கு உறுதியளித்தார். 

வாக்குறுதியின் பின்னர், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .