Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 215 வழக்குகள், மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
கசிப்பு வடித்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி சாரயம், கள்ளு, பியர் போற்றவை விற்பனை செய்தல், கஞ்சா போதைப்பொருட்களை தன்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட வழக்குகளே, இவ்வாறு ன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால், மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை, மன்னார் மாவட்டத்தில் 4 இலட்சத்து 1671 லீட்டர் பியர் (மோல்ட்) விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்து 747 லீட்டர் வெளிநாட்டு மதுவகைகளும் 4 இலட்சத்து 7271 லீட்டர் அரச சாராய வகைகளும் நுகர்வோரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, அனுமதிப்பத்திரம் பெற்ற மது விற்பனை நிலையங்களுக்கு எதிராக 31 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டப்பணமும் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago