Editorial / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயன் ஆசிரிய வள நிலையக் கட்டட வேலைகள் மந்த கதியில் இடம் பெறுவதன் காரணமாக ஆசிரிய வள நிலையத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் ஆசிரிய வள நிலையம் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இயங்கியது. போர் காரணமாக, இக்கட்டடம் சேதமடைந்ததன் காரணமாக, அக்கராயன் ஆசிரிய வள நிலையம் தற்போது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய கட்டடத்தில் இயங்கி வருகின்றது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக அக்கராயனில் ஆசிரிய வள நிலையத்துக்கான புதிய கட்டட வேலைகள் மந்த கதியில் இடம் பெறுவதன் காரணமாக, ஆசிரிய வள நிலையத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் ஆசிரிய வள நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்குமான பயிற்சி நிலையமாகவும் செயற்பட உள்ள நிலையில், இதன் கட்டட வேலைகளை விரைவாக முடிக்க வேண்டிய தேவைகள் உள்ள போதிலும், தற்போதும் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக, அக்கராயன் ஆசிரிய வள நிலையம் தொடர்ச்சியாக கிளிநொச்சியிலேயே இயங்குகின்றது.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025