2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் பலியாகியுள்ளார். 

22 வயதான அதே பகுதியை சேர்ந்த குறிதத் இளைஞன் இன்று (01)  காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அரசி ஆலையின் ஒரு பகுதியில் காணப்பட்ட வெள்ள நீரினை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

-எம்.றொசாந்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .