2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னாரில் முன்பள்ளிக்கு தளவாடங்கள் கையளிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஜிம்றோன் நகர் இருதய ஆண்டவர் முன்பள்ளிக்கு, இன்று (28) மதியம் ஒரு தொகுதி பிளாஸ்டிக் தளவாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் தளவாடங்களே, இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன

ஜிம்றோன் நகர் இருதய ஆண்டவர் முன்பள்ளி நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த தளவாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன்றாஜ், மன்னார் நகர சபை உறுப்பினர் திருமதி அந்தோனியம்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .