2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மன்னார் நகர சபையில் பாதீடு வரைவு சமர்ப்பிப்பு

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு, சபையில், இன்று (21) சமர்ப்பிக்கப்பட்டது.

மன்னார் நகர சபையின் 21ஆவது அமர்வு, நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தலைமையில், இன்று (21) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போதே, மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு, சபையில் திருத்தங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், 2019ஆம் ஆண்டுக்கான மன்னார் நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, வட்டார ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்திப் பணிகள், வடிகான் அமைப்பு, குளங்கள் புனரமைப்பு, புதிய வீதிகள் அமைத்தல், கழிவகற்றல் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .