2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத் துணையுடன் அபகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

கிளிநொச்சி - தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை, இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரித்துள்ளாரென, தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த பணிக்குழுவினர்,  எவ்வித அனுமதிகளையும் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும், இராணுவத்தினரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியை தனிநபர் ஒருவர் இராணுவத்தினரின் துணையுடன் அபகரித்துள்ளதாகவும் சாடினர்.

இவ்வாறு அபகரித்த குறித்த காணியை, கனரக வாகனத்தைக் (ஜேசிபி) கொண்டு சுத்தப்படுத்தி, அதில் வீடு அமைக்கும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டு வருகிறாரெனத் தெரிவித்த அவர்கள், அவர் சுத்தம் செய்ய பயன்படுத்திய கனரக வாகனம், குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

குறித்த விடயம் தொடர்பாக இராணுவ முகாமுக்குச் சென்று வினவிய போது, தமக்கும் குறித்த காணி அபகரிப்புச் சம்பவத்துக்கும் தொடர்பில்லையெனத் தெரிவித்த இராணுவத்தினர், இவ்விடயத்தை பிரதேச செயலாளர் ஊடாக அணுகி தீர்த்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனரெனவும், தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--