Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடம் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரனின் முயற்சியால் மீண்டும் அதே இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை அகற்றுமாறு பொலிஸாரும் தனியார் ஒருவரும் இணைந்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களை கடந்த 07ஆம் திகதி அச்சுறுத்தி முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடத்தை மாற்றினர்.
இதன் காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வேறிடத்தில் தமக்கான தரிப்பிடத்தினை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரனிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் முறையிட்டதனைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை (08) பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகளை அழைத்துச்சென்று போக்குவரத்துப் பொலிஸாருடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் மாங்குளம் முச்சக்கர வண்டி தரிப்பிடம் மீளவும் சாரதிகளிடம் கையளிக்கப்பட்டது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago