2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வரட்சியினால் கு​டிநீரை பெற்றுகொள்வதில் சிரமம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, மக்கள் தமக்கான குடிநீரைப்பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், வரட்சியினால் பெருமளவான பயன்தரு மரங்களும் அழிவடைந்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மலையாளபுரம், பொன்னகர், கோணாவில், யூனியன்குளம், உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறு குடிநீர்த்தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களூடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்ற போதும், ஏனைய தேவைகளுக்கான நீர் பெற்றுகொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கோணாவில், யூனியன்குளம் பகுதிகளில் நிலவுகின்ற கடுமையான வறட்சியினால் மீள்குடியேறிய மக்கள் மீள்நடுகை செய்துள்ள பெருமளவான தென்னை மரங்களும் ஏனைய மரங்களும் வரட்சியினால் அழிவடைந்து வருகின்றன.

குறிப்பாக 2010ஆம் ஆண்டுகளில்  மீள்குடியேறிய மக்கள் பாதுகாப்பற்ற திறந்த கிணறுகளை அமைத்து அவற்றின் மூலம் பயன்தரக்கூடிய தென்னை தோடை, மா, பலா போன்ற பயன்தருமரங்களை நடுகை செய்து வந்தனர். தற்பொழுது தொடர் வரட்சியினால் தற்போது இவை அழிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X