Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு. தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த மாபெரும் கண்காட்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், இன்று (06) ஆரம்பமானது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கலந்துகொண்டு, கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த கண்காட்சி, நாளை (07) முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெறும்.
குறித்த கண்காட்சியில், குறைந்த செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தைப் பேணல், நவீன நகரத் திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமானத்துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago