2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும்  சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு,  தேசோதய அமைப்பின் ஏற்பாட்டில் சர்வோதய பொது மண்டபத்தில், நேற்று காலை நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய பெண்கள், இளைஞர், யுவதிகள், பிரதேச நகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம், அது தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வில் விரிவுரையாளராக சமூக செயற்பாட்டாளர் வினோதினி பாலசுப்பிரமணியம், சர்வோதய  இயக்கதின் வடக்கு - கிழக்கு இணைப்பாளர் M.M.அன்வர், சக இணைப்பாளார் D.பெரமுன ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .