2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, வவுனியா மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (07) மாலை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் எம்.ஹனீபாவின் ஒழுங்குபடுத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. 

அந்தவகையில், வவுனியா நகரம், உப நகரங்களுக்குட்பட்ட முக்கிய வீதிகள் புனரமைக்கப்படுவது, விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவான குளங்களைப் புனரமைத்தல்,  பொதுமக்கள் வருமானத்தை ஈட்டும் பொருட்டு மீன் குஞ்சுகளை நன்னீர் குளங்களில் விடுதல், கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு, செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டு இயங்காத நிலையில் உள்ள ஆலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது, மாவட்டத்தில் தற்போது தேவையாகவுள்ள 8 ஆயிரம் வீடுகளை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

 இவற்றுக்கான திட்ட முன்மொழிவுகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வழங்குமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், எதிர்வரும்  வரவு - செலவு திட்டத்தின் போது அந்தந்த அமைச்சுகளினூடாக அவற்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .