2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் இன்று  செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசனைக்கு அமைய தேசிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, பல்வேறு வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வில், வர்த்தக வாணிபத்துறை கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜெயதிலக, ரிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரத்தின உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--